விரைவில் முடிவுக்கு வரப்போகிறது விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் சீரியல்... ஷாக்கிங் தகவல்
சீரியல்களுக்கு நாளுக்கு நாள் மக்களிடம் மவுசு கூடிக் கொண்டே வருகிறது.
இதனால் படங்களில் வாய்ப்புகள் தேடுவதை தாண்டி கலைஞர்கள் அனைவருமே சின்னத்திரையில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதனால் தமிழில் சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பாகிறது.
கிளைமேக்ஸ்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் முடிவுக்கு வரும் ஷாக்கிங் தகவல் தான் வெளியாகியுள்ளது.
அதாவது புதுமுகங்கள் சிலர் நடிக்க காதல், குடும்பம் என அனைவரும் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் சீரியல் விரைவில் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவலாக அமைந்துள்ளது, சீரியலை மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.