விஜய் தொலைக்காட்சியின் செம ஹிட் நிகழ்ச்சி திடீரென முடிந்தது- ரசிகர்கள் ஷாக்
விஜய் தொலைக்காட்சியில் எந்த அளவிற்கு சீரியல்கள் பெரிய வரவேற்பு பெறுகிறதோ அந்த அளவிற்கு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஆதரவு உள்ளது.
அப்படி ஒரே ஒரு ஆளாக 2 சீசன் வரை Start Music என்கிற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருபவர் பிரியங்கா. விஜய் டெலி விருதில் கூட இந்த ஷோவிற்கு சிறந்த நிகழ்ச்சி என்கிற விருது கிடைத்தது.
அண்மையில் இந்த Start Music நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் எல்லா டவுண்டிலும் பணம் அடித்து சாதனை செய்தார்கள், இதனை நிகழ்ச்சியிலேயே பிரியங்கா கூறியிருப்பார்.
இதேசமயம் இன்னொரு விஷயத்தையும் கூறி மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரியங்கா.
அதாவது நேற்றைய நிகழ்ச்சியோடு 2வது சீசன் Start Music முடிந்துவிட்டதாம். 3வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இப்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
நாணயம் சுண்டி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்: அமெரிக்க உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம் News Lankasri