பிக் பாஸ் செல்ல இருந்த ஜாக்குலினுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் இருக்கிறாரா?
விஜய் டிவி ஜாக்குலின்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக வருவார்கள் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒரு காலத்தில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் சீரியல் நடிகையாக மாறிய ஜாக்குலினும் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கும் பிக் பாஸ் 6 ஷோவுக்கு போட்டியாளராக வருகிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் அது பற்றி உறுதியான தகவல் எதுவும் இன்னும் வரவில்லை.
மருத்துவமனையில் அனுமதி?
இந்நிலையில் தற்போது ஜாக்குலின் ஹாஸ்பிடல் பெட்டில் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். 'எல்லாம் விரைவில் சரியாகிவிடும்' எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் 'ஜாக்குலினுக்கு என்னாச்சு' என அதிர்ச்சி உடன் கேட்டு வருகிறார்கள்.