விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் Title Winner யார் தெரியுமா?.. கசிந்த தகவல்
ஜோடி ஆர் யூ ரெடி
விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ராஜா என்றே கூறலாம்.
இதில் நடனம், பாடல், விளையாட்டு போன்றவற்றை மையப்படுத்தி நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாக வெற்றியும் கண்டது.
இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒருபக்கம் சூப்பராக ஓடி இன்னொரு பக்கம் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
வெற்றியாளர்
கடந்த ஜனவரி 2024ம் ஆண்டு ஜோடி ஆர் யூ ரெடி முதல் சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியது, 29 எபிசோடுகள் முடிவடைய ஏப்ரல் 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
பின் ஜனவரி 25, 2025ல் நடன நிகழ்ச்சியின் 2வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கி இப்போது முடிவுக்கும் வந்துவிட்டது.
ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த 2வது சீசனின் நடுவர்களாக ஸ்ரீதேவி, ரம்பா மற்றும் சாண்டி உள்ளனர்.
வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ஜோடி ஆர் யூ ரெடி 2வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது, இதன் வெற்றியாளர்களாக ராணி மற்றும் அபினவ் என கூறப்படுகிறது.