திடீரென விஜய் டிவி செய்த மாற்றம், கோபத்தில் உள்ளாரா எஸ்.ஏ.சி- இப்படியொரு முடிவு எடுத்தாரா?
கிழக்கு வாசல்
வெள்ளித்திரையில் பல ஹிட் படங்களை இயக்கி, தனது மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்து அவர் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுபவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தற்போது இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக சன் டிவியில் சீரியல்கள் தயாரித்து வரும் ராதிகா இப்போது விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற தொடர் தயாரிக்கிறார்.
இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவா நாயகனாக நடிக்க பூவே பூச்சூடவா தொடரில் நடித்து பிரபலமான ரேஷ்மா நாயகியாக நடிக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர் நடிக்கிறார்.
மேலும் தினேஷ், அருண், ஆனந்த் பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு வாசல் சீரியல் இரவு 10 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி முடிவு
மாலை 4 மணிக்கு யார் பார்ப்பார், இப்படி நேரம் மாற்றியது சரியில்லை என இந்த சீரியல் நடிகர்கள் முக்கியமாக எஸ்.ஏ.சந்திரசேகர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தொடரில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.