கண் கலங்கி அழவைத்த வீடியோ! மேடையில் கண்ணீர் விட்ட நபர்! ஒன்று கூடிய பிரபலங்கள்!
இந்த வருடத்தில் சின்னத்திரை வட்டாரம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இரண்டு முக்கியமானவர்களை டிவி வட்டாரம் இழந்துள்ளது.
இதில் அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் ஒன்று.
மற்றொன்று நகைச்சுவை நடிகரான வடிவேலு பாலாஜி இறந்தது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பல சீசன்களில் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்த அவரின் மரணத்தால் அவருடன் பணியாற்றிவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வடிவேலு பாலாஜி பெயரில் விருது கொடுக்கப்படுகிறது.
#KPY #GrandFinale - Sunday @ 1:30 pm #VijayTelevision pic.twitter.com/60mQZ8SNVx
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020