புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க
விஜய் டிவி
விஜய் டிவி என்று எடுத்தாலே ரசிகர்களுக்கு முதலில் ரியாலிட்டி ஷோக்கள் தான் நியாபகம் வரும், ஆனால் இப்போதெல்லாம் சீரியல்களிலும் கலக்கி வருகிறார்கள்.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி ஒரு ஷோ முடிய உடனே அடுத்த புதிய ஷோக்களை களமிறக்கி விடுகிறார்கள்.

இப்போது சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, ஸ்டார்ட் மியூசிக், அண்டாகாகசம் என நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது எந்த ஷோ முடியப்போகிறது என தெரியவில்லை அதற்குள் புதிய ஷோவிற்கான புரொமோவை களமிறக்கிவிட்டனர்.
புதிய ஷோ
அந்த புதிய ஷோவை தொகுத்து வழங்கப்போவது பிரியங்கா தான் என தெரிந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் பிரியங்கா Cupid இடம்பெற கியூட்டான புரொமோ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கும் புதிய ஷோவின் பெயர், பஸ்ட் கெஸ்ட் போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. Happy Wife Happy Life என பெயரிடப்பட்டுள்ள இந்த ஷோவின் முதல் எபிசோடில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.
பிரஜன், கானா வினோத், அமித் பார்கவ் ஆகியோர் தங்களது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.