பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்கள் இருந்தும் விஜய் தொலைக்காட்சிக்கு விழுந்த அடி- சோகத்தில் ரசிகர்கள்
எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. அதில் சில தான் மக்களிடம் வரவேற்பு பெறுகின்றன.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் நடந்தது ஆனால் சரியான ஹிட் பெறவில்லை.
அதேபோல் தற்போது மெகா ஹிட் சீரியல்களான பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.
கதையில் முழுக்க முழுக்க போட்டிகள் தான் நடக்கின்றன, இந்த மெகா சங்கமமும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக தெரிகிறது.
இரண்டுமே ஹிட் சீரியல் தான், ஆனால் இந்த வாரத்திற்கான TRPயில் மெகா சங்கமம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
TRPயில் முதல் இடம் பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்தால் சீரியல் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.
இது தொலைக்காட்சிக்கு ஒரு ஏமாற்றம் என்று கூறப்படுகிறது.