விஜய் டிவி சீரியல்களில் மாஸ் ரெக்கார்ட் செய்து முதல் இடத்தில் மகாநதி தொடர்... அப்படி என்ன சாதனை?
மகாநதி சீரியல்
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.
அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது கதையில் விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலாவால் கதையில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. வெண்ணிலாவை சமாளித்து காவேரியுடன் விஜய் எப்படி இணைய போகிறார் என்பதை காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சாதனை
தற்போது இந்த வார புரொமோவில் வில்லன் குரூப் ஏதாவது செய்வார்கள் அதுதான் புரொமோவாக வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் விஜய், காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறியும் அழகில் தருணம் புரொமோவாக இடம்பெற்றது. எதிர்ப்பார்க்காத நேரத்தில் இந்த புரொமோ வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்.
விஜய் டிவி தொடர்களில் அதிக லைக்ஸ் குவித்த தொடரின் புரொமோ என்றால் அது தென்றல் வந்து என்னை தொடும் தான்.
ஆனால் இந்த சீரியலின் புரொமோ சாதனையை முறியடித்து முதல் இடத்தை வந்துள்ளது விஜய்-காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயம் அறியும் புரொமோ. 162K லைக்ஸ் மேல் பெற்றுள்ளது மகாநதி சீரியல் புரொமோ.