மனைவி கைக்குழந்தையுடன் நடுரோட்டில் நிற்கிறேன்.. நாஞ்சில் விஜயனுக்கு என்ன ஆனது?
நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலம் ஆனவர். குறிப்பாக பெண் வேடத்தில் அவர் அதிகம் நிகழ்ச்சிகளில் காமெடி செய்து இருப்பார்.
நாஞ்சில் விஜயன் தற்போது தான் நடுரோட்டில் குடும்பத்துடன் நிற்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் புக் செய்த பேருந்து நிறுவனம் மீது கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

புகார்
பேருந்து Break Down ஆவது இயற்கை ஆனால் பயணிகளுக்கு அதனை முறையாக அறிவிக்க வேண்டும் எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் இரண்டு மணி நேரம் காரைக்குடி பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் போனை எடுக்க மாட்டார்கள் ரெட் பஸ் ku phone செய்தாலும் அவர்களும் எங்களுக்கு எந்த மாற்று ஏற்பாடு செய்யவில்லை. இன்று மட்டும் நாங்கள் மூன்று டிக்கெட்டுக்கு ஏழாயிரம் ரூபாய் ரெட்பஸ் மூலமாக வெற்றி டிராவல்ஸிற்கு செலுத்தியுள்ளோம். எங்கள் பணத்தை திருப்பி தருவதற்கான ஏற்பாடு அவர்கள் செய்யவில்லை.
கைக்குழந்தையோடு நடுரோட்டில், எங்களை காக்க வைத்து நாளைக்கு நான் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய விடாமல் தடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ள வெற்றி டிராவல்ஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri