விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்! கதை இதுதானா?
சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுகொண்டு தற்போது புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றன. விஜய் டிவி சமீபத்தில் தொடங்கிய வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் அடுத்து என்ன சீரியல் தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு பதில் தற்போது கிடைத்துவிட்டது. 'சிப்பிக்குள் முத்து' என்ற பெயரில் தான் புது சீரியலை விஜய் டிவி தொடங்கி இருக்கிறது. அதன் பூஜை புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதில் ஹீரோ மற்றும் ஹீரோயின் யார் என்கிற தகவல் தற்போது வரை வெளிவரவில்லை. இந்த சீரியலின் பெயரையும் பழைய படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அந்த படத்தை போலவே விதவையை திருமணம் செய்ய முடிவெடுக்கும் நபர் பற்றிய கதையாக இருக்குமோ என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சிப்பிக்குள் முத்து சீரியலில் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் பூஜை ஸ்டில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.