அழகே அழகு, கனா கண்டேனடி தொடர்களின் ஆரம்பம் எப்போது?... வெளிவந்த விவரம்
விஜய் டிவி
ரசிகர்கள் வருடா வருடம் மிகவும் எதிர்ப்பார்த்து ஆர்வமாக பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 9வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த பிக்பாஸ் 9 சீசன் இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து 1 மணி நேரம் ஒளிபரப்பாகும், விரைவில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகும் நிலையில் புதிய சீரியல்களை விஜய் டிவி களமிறக்கியுள்ளனர்.

நேரம்
இதுவரை 3 புதிய சீரியல்களின் புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர். சுட்டும் விழ சுடரே, அழகே அழகு மற்றும் கனா கண்டேனடி.
ஒன்று ஜெயிலில் இருக்கும் அம்மாவின் கதை, இன்னொன்று கூட்டுக்குடும்ப கதை, அடுத்து நெருங்கிய 3 தோழிகளின் கதை வித்தியாசமான கதைக்களங்களாக அமைந்துள்ளது.
தற்போது 2 சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் பற்றிய தகவல் வந்துள்ளது. வரும் ஜனவரி 19 முதல் அழகே அழகு இரவு 9.30 மணிக்கும், கனா கண்டேனடி இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
