பிக் பாஸ் முடிந்ததும் புது ஷோவை தொடங்கிய விஜய் டிவி.. ஹிந்தியில் ஹிட் நிகழ்ச்சி தான்
விஜய் டிவியில் கடந்த வாரம் தான் பிக் பாஸ் 8ம் சீசன் நிறைவு பெற்றது. அடுத்து புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை களமிறக்க சேனல் தற்போது திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு புது ஷோவை கொண்டு வந்திருக்கிறது.
ஸ்டார்ட்அப் சிங்கம்
உலகம் முழுக்கவும் பிரபலமான Shark Tank நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற ஒரு நிகழ்ச்சியை தான் தற்போது விஜய் டிவி தொடங்கி இருக்கிறது.
ஸ்டார்ட்அப் சிங்கம் என அந்த நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டி இருக்கின்றனர். வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அல்லது தயாரிப்பவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டாளர்களை பெறும் நிகழ்ச்சி தான் இது.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பாருங்க. ஹிந்தி போல தமிழும் இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜனவரி 26 முதல் ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
STARTUP-னா என்னனு தெரியுமா..? Startup Singam - ஜனவரி 26 முதல் ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #StartupSingam #VijayTV #VijayTelevision pic.twitter.com/IDp4481Qrf
— Vijay Television (@vijaytelevision) January 21, 2025

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
