அதள பாதாளத்தில் டிஆர்பி.. விஜய் டிவி எடுத்த முக்கிய முடிவு
விஜய் டிவியின் தொடர்களில் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து குறைந்து வருகிறது. சன் டிவி உடன் போட்டி போட்டு டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்டில் ஒரு இடத்தை கூட விஜய் டிவியால் தற்போது பிடிக்க முடியவில்லை.
விஜய் டிவியின் டாப் சீரியலான சிறகடிக்க ஆசை தொடர் கடந்த வாரம் 8.51 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கிறது.
அது மட்டுமின்றி இரண்டாம் இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி வெறும் 7.48 புள்ளிகள் தான் பெற்றுள்ளது.
மகா சங்கமம்
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அதற்கு 5.52 புள்ளிகள் தான் வந்திருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவி மகா சங்கமம் முறையை மீண்டும் கையில் எடுத்து இருக்கிறது. பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டும் இணைவது போல மகா சங்கமம் விரைவில் வர இருக்கிறதாம்.
இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.