பாண்டியன் ஸ்டோர்ஸ் கிளைமாக்ஸ்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்கு! முழு விவரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் கூட்டு குடும்பத்தில் வாழும் போது வரும் பிரச்சனைகளை பற்றிய இந்த கதைக்கு ஆரம்பத்தில் அதிகம் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் போக போக கதையில் அரைச்ச மாவையே அரைத்து ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படும் நிலையில் தான் தற்போது அந்த தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது.
கிளைமாக்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடியப்போகிறது என தகவல் பரவி வரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு இருந்த பிரச்சனைகள் சரியாகி வரும் நிலையில், ஜீவாவின் மாமனார் வில்லன் ஜனார்த்தனன் அவரது இரண்டாவது மருமகனால் பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.
அதனால் அவர் பெரிய அளவில் நஷ்டம் ஆகி பணம் இல்லாமல் தவிக்கும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்து உதவி செய்வது போல தான் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்குமாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.