முத்தழகு தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 3 தொடர்கள்... ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஒரு ஷோ பிக்பாஸ்.
7 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானதை தொடர்ந்து வரும் அக்டோபர் 6ம் தேதி 8வது சீசன் தொடங்க உள்ளது.
இதனால் விஜய் டிவியின் சீரியல்களின் நேரம் மாற்றம் வரும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்துள்ளது.
4 சீரியல்கள்
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளே வருகிறது என்ற உடனே விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் முத்தழகு தொடர் முடிவுக்கு வருவதாக கூறப்பட்டது.
இப்போது என்னவென்றால் இந்த தொடலை தாண்டி தொடர்ந்து 3 சீரியல்கள் முடிவுக்கு வருகிறதாம், அதில் சில புதியதாக தொடங்கப்பட்ட தொடர்களும் உள்ளதாம்.
அது என்னென்ன தொடர்கள் என்றால் பாக்கியலட்சுமி, பனிவிழும் மலர்வனம் மற்றும் வீட்டுக்கு வீடு வாசல் படி தொடர்களும் முடிவுக்கு வருகிறதாம்.
பனிவிழும் மலர்வனம் மற்றும் வீட்டுக்கு வீடு வாசல் படி தொடர்கள் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல்கள், ஆனால் டிஆர்பி காரணமாக இந்த சீரியல்களை முடிக்க தொலைக்காட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.