விஜய் டிவி ப்ரைம் டைம் சீரியல்களின் ப்ரோமோ.. தொடர்களின் நேரம் மாறுகிறதா?
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாக்கியலட்சுமி விரைவில் முடிவடைய இருப்பதால், தற்போது மற்ற தொடர்களின் நேரத்தில் மாற்றங்கள் இனி இருக்குமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்நிலையில் ப்ரைம் டைம் தொடர்களின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்து இருக்கிறது.
ப்ரோமோ
எந்தெந்த சீரியல் எத்தனை மணிக்கு வருகிறது என இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான schedule தற்போது வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - மாற்றம் இல்லை (இரவு 8 மணி)
அய்யனார் துணை - மாற்றம் இல்லை (இரவு 8.30)
சிறகடிக்க ஆசை - மாற்றம் இல்லை (இரவு 9 மணி)
சின்ன மருமகள் - மாற்றம் இல்லை (இரவு 10 மணி)
4 தொடர்களுக்கும் சேர்த்து வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ இதோ.