யாரும் கடைசி வரை வரமாட்டாங்க.. டைவர்ஸ் பற்றி தான் பிரியங்கா இப்படி பேசினாரா
பிரியங்கா
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாராக ப்ரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக சென்ற அவர் சர்ச்சைகளில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார்.
ஆனால் அதற்கு பிறகு அவர் வழக்கம்போல விஜய்டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி காமெடியாக பேசி எல்லோரையும் மீண்டும் ஈர்த்துவிட்டார். பிக் பாஸ் சர்ச்சைகளை எல்லாம் தற்போது ரசிகர்கள் தற்போது நிச்சயம் மறந்தே போயிருப்பார்கள்.
எமோஷ்னல் பேச்சு
பிரியங்கா விஜய் டிவி ஷோக்கள் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி தனியாக youtube சேனலும் நடத்தி வருகிறார். அதில் அவர் பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் லண்டன் சென்ற வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எமோஷ்னலாக ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.
"விஜய் டிவியில் 10 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன், தொகுப்பாளராகி 14 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இனி கிடைக்கும் நேரத்தில் ஊர் ஊராக சுற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. அதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்."
"வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக புரிந்துகொண்டேன். பயணம் தொடங்கும்போது வாழ்க்கையில் நிறைய பேர் வருவாங்க. நடுவில் அவர்கள் போவாங்க, வருவாங்க. ஆனால் இறுதிவரை நாம் மட்டும் தான்" என பிரியங்கா கூறி இருக்கிறார்.
திருமணம் - விவாகரத்து பற்றி தான் அவர் இப்படி பேசி இருக்கிறாரோ?
உதயநிதி பதிலாக கமல் ஹாசன் படத்தில் நடிக்கவரும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
