இரண்டு முறை திருமணம் செய்தது ஏன்? நடிகர் புகழ் விளக்கம்

By Parthiban.A Sep 04, 2022 08:50 AM GMT
Report

புகழ் திருமணம்

விஜய் டிவி நடிகர் புகழ் சமீபத்தில் அவரது காதலி பென்ஸ் ரியாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண போட்டோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பெரிய அளவில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

அது மட்டுமின்றி புகழ் செய்வது இரண்டாவது திருமணம் எனவும் தகவல் பரவியது. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் அதே பெண்ணை கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புகழ் பதிவு திருமணம் செய்திருக்கிறார். அந்த திருமணத்தின் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

இரண்டு முறை திருமணம் செய்தது ஏன்? நடிகர் புகழ் விளக்கம் | Vijay Tv Pugazh Clarifies On Marrying Twice

புகழ் பதில்

இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

என் தந்தை அன்பிற்கு ஒரு முறை…
என் தாய் அன்பிற்கு ஒரு முறை…
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…
வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் மேலும் ஒரு முறை தயார் .
இந்தியனாக இருக்கிறேன்
எல்லா புகழும் இறைவனுகே.

என அவர் குறிப்பிட்டு இருக்கிறார் . அதனால் குடும்பத்தினர் ஆசைக்காக தான் முறைப்படி திருமணத்தை மீண்டும் அவர் நடத்தி இருக்கிறார் என்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. 

அடுத்த நயன்தாரா இவங்க தான்.. நடனத்தில் எப்படி பின்னியெடுக்கிறார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US