கல்யாண மண்டபத்துல இலை எடுத்தால் பணம் கிடைக்கும்.. உருக்கமாக பேசிய விஜய் டிவி புகழ்
புகழ்
விஜய் டிவியின் மூலம் பலரும் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என இப்படி பலருடைய பெயரை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் வந்தவர்தான் புகழ்.
சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யார் என நகைச்சுவை நிகழ்ச்சிகளை வந்துகொண்டிருந்த புகழுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வாய்ப்பை கொடுத்தது. இதில் கலக்கிய புகழுக்கு தமிழக மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்தது.
இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கினார். யானை, அயோத்தி, 1947, வீட்ல விசேஷம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து நடித்தார். மேலும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உருக்கமாக பேசிய புகழ்
இந்த நிலையில், விஜய் டிவி புகழ் பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதில் "கல்யாண மண்டபத்துல இலை எடுத்தால் எனக்கு 30 ரூபாய் கொடுப்பாங்க. ஆனா, இப்போ நான் 15 மண்டபங்கள் ஓபன் பண்ணி வைத்திருக்கிறேன். முடி வெட்ட காசு இல்லாமதான் முடியை வளர்த்தேன். இன்னைக்கு எந்த ஒரு சலூன் திறப்பு விழாவிலும், புகழ் வரலையா அவருடைய கர்லிங் தான் பேமஸ் அவரை கூப்பிடுங்கனு சொல்றாங்க. நான் செய்த தொழிலை என்னைக்குமே மறக்கவில்லை. இன்னைக்கு வண்டி கழுவ விட்டாலும் நான் செய்வேன். அதனால நீங்க எல்லாருமே உங்கள பத்தி தப்பாக போடுற 500 கமாண்டுகளுக்காக வாழ்ந்தீர்கள் என்றால், மேலே வரும் 1500 லைக்குகளுக்கு உங்களால் போராடவே முடியாது" என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.