இனி 5 நாள் இல்லை.. விஜய் டிவி முக்கிய சீரியலில் வந்த மாற்றம்
விஜய் டிவியில் கடந்த மூன்று வாரங்களாக பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வந்தன. இந்த மகா சங்கமம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
ராஜா ராணி 2
ராஜா ராணி 2 இதுவரை வாரம் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் முதல் ஒரு முக்கிய மற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இனி சனிக்கிழமையும் இரவு 9.30 மணி முதல் 10.00 மணி வரை ராஜா ராணி 2 ஒளிபரப்பாக இருக்கிறது.
ஹால் டிக்கெட்டை ஒளித்து வைத்த சிவகாமி
இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். மருமகள் சந்தியா தன் பேச்சை மீறி படிப்பு பக்கம் செல்வதை விரும்பாத சிவகாமி அவரது ஹால்டிக்கெட்டை எடுத்து ஒளித்து வைத்து விடுகிறார்.
அதை மற்றவர்களுக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறார். ஆனால் கணவர் ரவிக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. சிவகாமி அந்த ஹால் டிக்கெட்டை சந்தியாவிடம் கொடுப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து அடுத்த வார எபிசோடுகளில் பார்க்கலாம்.
கூட நடிக்க வேண்டாம், அவரை ஒரு முறை நேரில் பார்த்தாலே போதும்: குக் வித் கோமாளி புகழ்