அழகான காட்சியுடன் முடிவுக்கு வந்தது சக்திவேல் சீரியல்... கடைசி எபிசோட் காட்சி இதோ
சக்திவேல்
சக்திவேல், விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சீரியல்.
ஹிந்தியில் ஒளிபரப்பான Mann Kee Awaaz Pratigya என்ற சீரியலின் ரீமேக்காக இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்க பிரவீன் ஆதித்யா மற்றும் அஞ்சலி பாஸ்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.
முதல் பாகம் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைய அதனை தொடர்ந்து 2ம் பாகம் தொடங்கப்பட்டது. 7 வருடங்களுக்கு பிறகான கதையாக 2ம் பாகம் ஒளிபரப்பாக இதில் நாயகனாக விக்ரம் ஸ்ரீ நடித்து வந்தார்.
சுலைமான் பாபு இயக்கிவந்த சக்திவேல் சீரியலின் 2ம் பாகம் முடிவுக்கு வந்துவிட்டது.

போட்டோ
இதுவரை 707 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கும் சக்திவேல் சீரியல் இன்று மார்ச் 28 முடிவுக்கு வந்துவிட்டது.
வேலுவிடம் சக்தி இவள் தான் நம் மகள் என காட்ட எமோஷ்னல் காட்சிகளுடன் சீரியல் முடிந்துவிட்டது. இதோ சக்திவேல் சீரியலின் கடைசி காட்சி போட்டோ,
You May Like This Video