விஜய் டிவி-யை தொடர்ந்து முக்கிய தொலைக்காட்சியில் அறிமுகமாகும் பிக் பாஸ் சம்யுக்தா..
பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் பிரபல நடிகை சம்யுக்தா.
ஆம், மாடலாக இருந்த சம்யுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த துக்ளக் தர்பார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம்.
அதுமட்டுமின்றி ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சம்யுக்தா.
இதனிடையே விஜய் டிவி-யில் பிரபலமானதை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அறிமுகமாகவுள்ளார்.
ஆம் Junior Super Stars நிகழ்ச்சியை தற்போது சினேகா, செந்தில் உடன் சம்யுக்தாவும் தொகுத்து வழங்கவுள்ளார்.
