முடிவுக்கு வந்த விஜய் டிவியின் முக்கிய சீரியல்! கடைசி காட்சி இதுதான்
விஜய் டிவி அடுத்து பல புது சீரியல்களை களமிறக்க இருக்கிறது. அதன் டிஆர்பி கடந்த சில மாதங்களாக குறைத்து வரும் நிலையில் இப்படி புது தொடர்களை கொண்டு வருகின்றனர். சமீபத்தில் செல்லம்மா என்ற சீரியலின் ப்ரோமோ வெளிவந்து இருந்தது.
இந்நிலையில் இன்று முக்கிய சீரியலான செந்தூரப்பூவே தொடர் முடிக்கப்பட்டு இருக்கிறது. பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து, மாமியாரும் ரோஜாவை மருமகளாக ஏற்றுக்கொள்வது போல இன்று ஒளிபரப்பான கடைசி எபிசோடில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த சீரியல் முடிக்கப்படும் என சென்ற வாரமே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் குறைந்த அளவு டிஆர்பி தான் செந்தூரப்பூவே சீரியலுக்கு கிடைத்து வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. புது சீரியலை கொண்டு வருவதற்காக அவசர அவசரமாக இந்த தொடர் முடிக்கப்பட்டு இருக்கிறது.