கயல் சீரியலில் புதிதாக நடிக்க வரும் விஜய் டிவி சீரியல் நடிகை.. அட இவரா!! என்ன கதாபாத்திரம் தெரியுமா
கயல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கயல். இந்த சீரியலில் கார்த்திக் வெங்கட், சைத்ரா ரெட்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள். TRP-யில் எப்போதும் டாப் 5-ல் இடம்பெற்று வரும் சீரியல்களில் இதுவும் ஒன்றாகும்.

விறுவிறுப்பான கதைக்களத்தில் நகர்ந்து வரும் கயல் சீரியலில் தற்போது புதிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரியா
அவர் வேறு யாருமில்லை, சின்னத்திரை நடிகை ரியா தான் கயல் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சண்டக்கோழி, பாரதி கண்ணம்மா, நளதமயந்தி போன்ற சீரியல்களிலும் நடிகை ரியா நடித்துள்ளார்.

இவர் கயல் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவருடைய என்ட்ரி கதையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan