பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ
விஜய் டிவி
விஜய் டிவி, நிறைய வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களை கவர்ந்த ஒரு தொலைக்காட்சி.
சூப்பர் சிங்கர், ஜோடி ஆர் யூ ரெடி, கேம் ஷோக்கள், நீயா நானா என நிறைய வித்தியாசமான நிகழ்ச்சிகள் வர ரசிகர்களும் ஆர்வமாக பார்க்க துவங்கினார்கள். இப்போதும் தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் கெத்து காட்டி வருகிறார்கள்.
விருது
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா, இதில் இரண்டு பெண் குழந்தைகள் நடித்திருந்தனர். அந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவர் தான் ரக்ஷா, இவர் தொடரில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் குழந்தை நட்சத்திரமாக நிவாஷினி ஷ்யாம் நடித்திருந்தார். நிவாஷினி மற்றும் ரக்ஷா இருவரும் பிரபல சீரியல் நடிகர் ஷ்யாம் மகள்கள் தான்.
10வது விஜய் டெலிவிஷன் விருது விழாவில் ஷ்யாம் சிறந்த வில்லனாக விருதினை தனது 2 மகள்களுடன் சேர்ந்து வாங்கியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்களா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.