ஜெயிலர் படத்திலிருந்து முக்கிய காட்சியை காப்பியடித்த விஜய் டிவி சீரியல்.. அட கொடுமையே என கூறும் ரசிகர்கள்
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் ஜெயிலர். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் வில்லனுடைய ஆட்கள் ரஜினியின் பேரனை கொலை செய்ய முயற்சி செய்வார்கள்.
ஐஸ் க்ரீம் வண்டியின் அருகே ரஜினியின் பேரன் இருக்க, அவனுடைய கழுத்தை கத்தியால் வெட்ட வில்லனுடைய ஆட்கள் முயற்சி செய்யும் போது ரஜினி தனது பேரனின் கழுத்தை சாயவைத்து வந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்.
இந்த காட்சி திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த காட்சியை அப்படியே காப்பியடித்து விஜய் டிவி சீரியலில் எடுத்துள்ளனர்.
காப்பியடித்த விஜய் டிவி சீரியல்
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இதே போல் காட்சியை காப்பியடித்து எடுத்துள்ளார்கள். இதில் ஹீரோவின் மகளை வில்லனுடைய ஆட்கள் கொலை செய்ய வருவார்கள்.
ஜெயிலர் படத்தில் எப்படி ரஜினியின் பேரன் ஐஸ் க்ரீன் வண்டியின் அருகே இருந்தாரோ, அதே போல் இந்த சீரியலில் ஹீரோயின் மகளும் ஐஸ் க்ரீன் வண்டியின் பக்கத்தில் தான் இருப்பார்.
அதே போல் வில்லனின் ஆட்கள் ஹீரோவின் மகளை கொலை செய்ய ஆட்டோவில் இருந்து கத்தியை வெளியே வைத்து முயற்சி செய்வார்கள்.
ஜெயிலர் படத்தில் தனது பேரனை ரஜினி காப்பாற்றியதை போல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோ தனது மகளை காப்பாற்றுவார். இதை கவனித்த ரசிகர்கள், அட பாவீங்களா அப்படியே காப்பி அடித்து எடுத்துருக்கீங்களே என கூறி வருகிறார்கள்.
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)