கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ப்ரோமோவால் விஜய் டிவி-யின் புதிய சீரியலுக்கு வந்த சோதனை..
சீரியல் ப்ரோமோ
விஜய் டிவி சீரியல்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே காணப்படுகிறது, இதில் புதிதாக எந்த ஒரு சீரியல் ஒளிபரப்பானாலும் அதை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிடுகிறது.
அந்தளவிற்கு விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடையே வரவேற்பு உண்டு. அதன்படி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் ஈரமான ரோஜாவே 2, இதில் கேப்ரியெல்லா, பவித்ரா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த சீரியலின் புதிய ப்ரோமோவை தான் தற்போது நெடிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். ஆம், அந்த ப்ரோமோவில் ஜில்லா பட பாணியில் காட்சியையும், விக்ரம் பட பின்னணி இசையுடன் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
இதை கண்ட இணையதள வாசிகள் பலரும் பலவிதமாக அதனை கிண்டலடித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
What did I just watch ? https://t.co/jPDYiwMZZo
— Roöpiì (@RealRoopii) June 27, 2022
திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடிக்கும் முதல் திரைப்படம் ! யாருக்கு ஜோடியாக தெரியுமா?