வாங்கோ சீரியல் பிரியர்களே.... உங்களுக்காக கடந்த வார விஜய் தொலைக்காட்சி டாப் 10 சீரியல்கள் குறித்து ஒரு குட்டி ஸ்டோரிய ஜாலியா படிச்சிட்டு போங்கோ...
சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, நிறைய கேம் ஷோ அப்படினு கலக்கிட்டு வந்த விஜய் கையில் எடுத்த இன்னொரு விஷயம் தான் சீரியல். ஆரம்பத்துல எல்லா தொலைக்காட்சி போல குடும்ப கதைய அவங்க ஒளிபரப்பி வந்தாலும் இடையிலே இளைஞர்களை கவரும் வண்ணம் அவங்க நிறைய பள்ளி, கல்லூரி கால கதைகள் கொண்ட சீரியல்கள ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. அதுக்கு ஒரு உதாரணம் சொல்லனும் அப்படினா கனா காணும் காலங்கள் சொல்லலாம். இப்போது கனா காணும் காலங்கள் புதிய கலைஞர்களை வைத்து ஒரு தொடர் வருகிறது, ஆனால் எப்போது ஒளிபரப்பாக இருக்கிறது என்பது தெரியவில்லை.
சரி விஜய் தொலைக்காட்சியில் மொத்தம் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகிறது என்று தெரியுமா, இதோ அந்த லிஸ்ட்
காற்றுக்கென்ன வேலி
பாவம் கணேசன்
வேலைக்காரன்
நம்ம வீட்டு பொண்ணு
தென்றல் வந்து என்னை தொடும்
முத்தழகு
செந்தூரப் பூவே
நாம் இருவர் நமக்கு இருவர் 2
மௌன ராகம் 2
தமிழும் சரஸ்வதியும்
பாண்டியன் ஸ்டோர்ஸ
பாக்கியலட்சுமி
பாரதி கண்ணம்மா
ராஜா ராணி 2
ஈரமான ரோஜாவே 2
TRP டாப் 10 தொடர்கள்
வாரா வாரம் தொடர்களின் TRP அந்த வார கதைக்களத்தை பொறுத்து மாறும். அப்படி கடந்த வாரம் டாப்பில் இருந்த தொடர்களின் விவரத்தை பார்ப்போம்.
10வது இடம் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் உள்ளது.
குடும்பம், காதல், நகைச்சுவை கலந்த ஒரு தொடர். முக்கியமாக இதில் மாயன் செய்யும் அலப்பறைகளை தான் மக்கள் அதிகம் சீரியலில் ரசிக்கும் ஒரு விஷயம். முத்துராசு கொலை வழக்கிற்கு பிறகு தொடர் கொஞ்சம் போர் அடித்துவிட்டது. அடுத்த வாரத்தில் சரியாக ஐஸ்வர்யாவின் திருமணத்தின் போது முத்துராசு எண்ட்ரீ இருக்கிறது என சில தகவல் கசிந்துள்ளது.
கடந்த வார சீரியல் பஞ்ச்
கதை பிளாப்பு ஆனா மாயன் காமெடி டாப்பு
9வது இடம் காற்றுக்கென்ன வேலி
ஆஹா இதல்லவா ஒரு காதல் தொடர் என சீரியல் பார்ப்பவர்களுக்கு எப்போதுமே லாலா லலா என தொடர் இசை ஒளித்துக் கொண்டே இருக்கும். இடையில் தொடரின் நாயகன் தர்ஷன் தயாரிப்பு குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மாற இப்போது சுவாமிநாதன் என்பவர் நடிக்கிறார். புதிதாக வந்தாலும் மக்களின் மனதில் நின்றுவிட்டார். அம்மா-மகன் எப்போது இணைவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே மக்களை வைத்திருக்கிறது கதை. அடுத்த வாரத்தில் வெண்ணிலாவிடம் சூர்யா பூவுடன் ஒரு கடிதம் கொடுக்கிறார், அது IAS அப்ளிகேஷன். இதைப்பார்த்த சாரதா வெண்ணிலா எண்ணம் மாறுகிறதோ என கவலைப்படுகிறாராம். இன்னும் கொஞ்சம் கதையை மெழுகேற்றினால் சீரியல் டாப்பில் வரலாம்.
கடந்த வாரம் சீரியல பஞ்ச்
தெறிக்கவிட்ட சாரதா புஸ்பானம் ஆன மீனாட்சி
8வது இடம் நம்ம வீட்டு பொண்ணு
Khorkuto என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் இந்த தொடர். பிரவீன் பென்னட் இயக்கும் இந்த தொடர் மீனாட்சி என்ற பெண்ணை குறித்து என்றாலும் கூட்டு குடும்பத்தை பற்றி அதிகம் பேசும் கதை. தொடர் குறித்து அவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் எதுவும் இல்லை என்றாலும் 8வது இடத்தை பிடித்திருப்பது ஆச்சர்யம் தான்.
சீரியல் பஞ்ச்
இப்போதைக்கு ஒன்னும் புரியவில்லை
7வது இடம் தென்றல் வந்து என்னை தொடும்
Khelaghor என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான். சீரியல் ஆரம்ப புரொமோவில் நாயகன் கோவிலுக்கு வந்த கதாநாயகிக்கு தாலியை கட்டிவிடுவார், அவருக்கு சாஸ்திரம் சம்பிரதாயம், கலாச்சாரம் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் நாயகி அதையெல்லாம் பார்க்க கூடியவர். இந்த சீரியல் புரொமோ தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது என சிலர் போர்க்கொடி தூக்கினார்கள். 105 எபிசோடுகளை தாண்டிவிட்டது, இதில் மக்கள் அதிகம் ரசிப்பது நாயகியின் வசனங்கள் தான். தொடரின் கருவுக்கு ஏற்றார் போல் நாயகன்-நாயகி மீது லுக் விடுகிறார், விரைவில் காதலை வெளிப்படுத்துவாரா என்பதை பார்ப்போம்.
பஞ்ச்
நாயகன் மாஸ் ஆனால் நாயகி படு மாஸு பா
6வது இடம் ஈரமான ரோஜாவே 2
முதல் பாகவே கதை இல்லாமல் முடித்தார்கள், இந்த புதிய கதையுள்ள தொடருக்கு வேறு பெயர் வைத்து தொடங்கி இருக்கலாம். முதல் பாகத்தில் என்ன மாற்றம் இருந்ததோ அதே இந்த 2ம் பாகத்திலும் நடக்கப்போகிறது. திருமணம் பேசுவது ஒரு ஜோடிக்கு ஆனால் இணைவது வேறொரு ஜோடிகளாக இருக்கிறார்கள். கதை இப்போது தான் ஆரம்பமானது அதனால் இன்னும் மக்கள் அதிகம் பேச ஆரம்பிக்கவில்லை.
பஞ்ச்
இப்போதைக்கு சுமார் தான்
5வது இடம் மௌன ராகம்
இந்த கதையின் கரு பற்றி நமக்கு நன்கு தெரியும். இரண்டாவது சீசன் முதல் பாக டச்சிற்கு வந்துவிட்டது. சத்யாவின் உண்மையை தெரிந்துகொண்ட ஸ்ருதி தனது அம்மாவை போல ராஜ தந்திரம் செய்வதில் இறங்கிவிட்டார். அதன் முதல் அடி சத்யாவுக்கு விழுந்தது தான் மியூசிக் பள்ளி பிரச்சனை. ஆனால் இந்த சீசனில் ஸ்ருதிக்கு, சத்யா சரியான டப் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கதை, நடிகர்கள், பாடல்களை தாண்டி மக்கள் தொடரின் ஒளிப்பதிவு, படப்பிடிப்பு இடங்களை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். தொடர் முழுக்க முழுக்க கேரளாவில் தான் எடுக்கப்படுகிறது, சொல்லப்போனால் சீரியல்களிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் ஒரு தொடராக மௌன ராகம் உள்ளது.
பஞ்ச்
பிரம்மாண்டத்தின் உச்சம், கதை இல்லா சோகம்
4வது இடம் தமிழும் சரஸ்வதியும்
விகடன் கதை குழுமம் முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. சந்திரகலா Vs கோதை இவர்களின் பகடை காயாக இருப்பவர்கள் தான் குடும்பம். ஆரம்பத்தில் விறுவிறுப்பின் உச்சமாக, அதிரடி சரவெடியாக இருந்தது ஆனால் இப்போது நமுத்துப்போன வெடியாக கதை ஒரே அழுகையில் சென்றுகொண்டிருக்கிறது. இயக்குனர் அதிகம் அழ வைத்துவிட்டார், கொஞ்சம் நடிகர்களுக்கு அவர் க்ளிசரின் போடுவதை நிறுத்தினால் நன்று.
பஞ்ச்
நமுத்துப்போனது சரவெடி பட்டாசு
3வது இடம் பாரதி கண்ணம்மா
இந்த தொடர் பற்றி நிறைய மக்கள் பேசிவிட்டார்கள். கர்ப்பமான கண்ணம்மா அடிபட்டதுடன் கையில் ஒரு பை வைத்துக் கொண்டு நியாயத்திற்கான போராடி விண்வெளி வரை நடந்துவிட்டார், ஆனால் இன்னும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த தொடர் இயக்குனர் பிரவீன் பென்னட் மீது பெண்களுக்கு பெரிய கோபம் உள்ளது. கதாநாயகன் தனது மனைவியை ஒவ்வொரு முறையும் கொச்சைப்படுத்தி அந்த பெண்ணை கஷ்டப்படுத்திக் கொண்டே வருகிறார். கதாநாயகியும் நியாயம் கிடைக்கும் என்று அமைதியாக இருப்பது போலவே காட்டுகிறார். கதையை ஓட்ட வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணின் மானத்தை வைத்து இப்படி ஒவ்வொரு முறையும் நாயகன் கொச்சைப்படுத்த கதையை ஓட்ட வேண்டுமா என மக்கள் கேள்வி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இயக்குனர் கவனித்தால் நன்று. ரசிகரின் பார்வையில்
பஞ்ச்
கதைக்காக பெண்ணை கொஞ்சைப்படுத்துவதா...
2வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்
இது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் விக்ரமன் படம் தான். அண்ணன்-தம்பிகள், கூட்டுக் குடும்பம். அதில் இப்படி தான் வாழ வேண்டும், அதுதான் அழகு என ஒவ்வொரு முறை சுட்டிக்காட்டும் ஒரு தொடர். இதில் தொடருக்கான ஒரு பெருமை என்னவென்றால் தமிழிலேயே உருவான ஒரு கதை, இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ரசிகரின் பார்வையில்
பஞ்ச்
அண்ணன் டா தம்பிகடா தான்
1வது இடம் பாக்கியலட்சுமி
Sreemoyee என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் இது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போல் கதையில் பல மாற்றங்கள் உள்ளது. இதில் ஹைலைட் கதாபாத்திரமே கோபி தான், முதலில் இவரது நடிப்பை கலாய்த்து வந்தவர்கள் இப்போது திட்டி வருகிறார்கள். பெண்ணை ஏமாற்றும் கோபி, முட்டாள் பாக்கியலட்சுமி என்று சிலர் திட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது இந்த சீரியல் குழுவினர் பல இடங்களுக்கு சென்று பெண் ரசிகைகளை சந்தித்து வருகிறார்கள். ரசிகரின் பார்வையில்
பஞ்ச்
இவ்வளவு அப்பாவியாக ஒரு பெண்ணா