விஜய் டிவி முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம், திடீரென நிறுத்தப்பட்ட மற்றொரு ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்
சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் இப்போது மக்களிடம் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையே தான் எப்போதும் TRP போட்டி நடக்கும். தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் நேரம மாற்றம் நடந்துள்ளது.
வரும் அக்டோபர் 3ம் தேதியில் இருந்து பெரிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.
10 மணிக்கு ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியல் மாலை 7 மணிக்கும், 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 6.30 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
அதோடு செந்தூரப்பூவே சீரியலை பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை 3 மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்வுள்ளதாம்.