முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ
சக்திவேல்
விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல். குடும்பம், கடமை மற்றும் உணர்ச்சிகளைக் கலந்த ஒரு கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பானது.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் அஞ்சலி பாஸ்கர், பிரவீன் ஆதித்யா இருவரும் ஜோடியாக நடித்து வந்தார்கள். திடீரென இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைய அதே வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது.
அந்த 2ம் பாகத்தில் நாயகன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் சில மாற்றம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்தது.

மாற்றம்
சக்திவேல் சீரியல் இந்த வாரம் வரும் சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு கடைசி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இதனால் திங்கள் முதல் சில சீரியல்களின் நேரம் மாற்றம் நடக்க உள்ளது. வரும் திங்கள் முதல் தனம் சீரியல் மதியம் 1.30 மணிக்கும், அழகே அழகு சீரியலின் மறு ஒளிபரப்பு மாலை 3.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் News Lankasri
ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri