இந்த வார விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங்.. எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது தெரியுமா?
TRP
ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குறித்து TRP ரேட்டிங் வெளிவரும். அந்த வகையில் கடந்த வாரத்திற்கான விஜய் டிவியின் TRP ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் எந்த சீரியல்
மக்களிடம் இருந்து பேராதரவை பெற்று, 6.73 TRP ரேட்டிங்குடன் அய்யனார் துணை சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 6.70 TRP ரேட்டிங் பெற்றுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் இரண்டாவது இடமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5.89 TRP-யுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும், மருமகள் சீரியல் 4.98 TRP ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தையும், 4.68 TRP ரேட்டிங்குடன் அழகே அழகு சீரியல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதன்பின், சிந்து பைரவி, கனா கண்டேனடி, மகாநதி, கண்மணி அன்புடன், தென்றலே மெல்ல பேசு, சுட்டும் விழி சுடரே, தானம் மற்றும் நாகின் ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.