இதுவரை டாப்பில் இருந்த சிறகடிக்க ஆசை டிஆர்பியை முந்திய சின்ன மருமகள்... மாறிய விஜய் டிவி தொடர்கள் விவரம்
வாரா வாரம் வியாழக்கிழமை என்றாலே சின்னத்திரை நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படி என்ன விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது தான், டிஆர்பி ரேட்டிங். கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வந்துள்ளது, அதில் சன் டிவியில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் விஜய் டிவி ஆர்பியில் ஒரு மாற்றம் நடந்துள்ளது.
அதாவது சீரியல் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் வந்து கொண்டிருந்த சிறகடிக்க ஆசை இப்போது 2வது இடத்தில் உள்ளது.
7.81 ரேட்டிங் பெற்று முதன்முறையாக டாப்பிற்கு வந்துள்ளது சின்ன மருமகள் தொடர். கடந்த வாரம் இந்த தொடரில் திருமண டிராக் தான் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகியது.
டிஆர்பி விவரம்
விஜய் டிவியில் கடந்த வாரம் ஹிட்டாக ஓடிய டாப் 5 தொடர்கள் விவரம்
- சின்ன மருமகள்
- சிறகடிக்க ஆசை
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- ஆஹா கல்யாணம்
சன் டிவி சீரியல்களின் டாப் 5 தொடர்கள்
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- கயல்
- மருமகள்
- அன்னம்