விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஷோவின் புதிய சீசன்- அட்டகாசமாக வந்த தகவல், புதிய லுக்குடன் இதோ
புதிய ஷோ
தமிழ் சின்னத்திரையில் ஹிட்டாக சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஒரு தொலைக்காட்சி விஜய்.
இதில் மக்களை கவரும் வண்ணம் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதேபோல் மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.
சூப்பர் சிங்கர், நடன நிகழ்ச்சிகள், கேம் ஷோக்கள், காமெடி நிகழ்ச்சிகள் என நிறைய இருக்கிறது.
தற்போது பல வருடங்களுக்கு முன் ஹிட்டாக ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சி இப்போது புதுப்பிக்கப்பட்டு அண்மையில் தொடங்கியுள்ளது.
அடுத்த சீசன்
இந்த நிலையில் இன்னொரு ஹிட் ஷோவின் புதிய சீசன் தொடங்க இருக்கிறது. தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்க Start Music 5வது சீசன் விரைவில் வர இருக்கிறதாம்.
நிகழ்ச்சியின் குட்டி புரொமோ தற்போது வெளியாக ரசிகர்கள் வி ஆர் வெயிட்டிங் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.