50 எபிசோடுகளுக்குள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சீரியல், உருக்கமான பதிவை வெளியிட்ட இயக்குனர் !
விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்த புதிய தொடர் தான் வைதேகி காத்திருந்தாள்.
இந்தத் தொடரில் நடிகர் பிரஜினும், சரண்யாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர், திடீரென ப்ரஜின் படங்களில் நடிக்க காமிட்டானதால் 'வைதேகி காத்திருந்தாள்' தொடரிலிருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக ‘ராஜபார்வை’ தொடரில் கதாநாயகனாக நடித்த முன்னா வைதேகி காத்திருந்தாள் தொடரின் புதிய கதாநாயகனாக நடித்துவந்தார்.
இந்நிலையில் 50 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அத்தொடரின் இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "வாழ்க்கைப் பயணத்துல சுவாரஸ்யமான விஷயமே பல திருப்பங்கள் தான். இன்னும் கூடுதலான பாஸிட்டிவ் எனர்ஜியோட அடுத்த எதிர்பாராத சுவாரஸ்யத்தைத் தேடிப் பயணிக்கிறேன். எனது பயணத்தில் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கும், என்னுடன் பயணித்த.. பயணிக்கும் அனைவருக்கும் என்றென்றும் நன்றிகள் பல!’ என பதிவிட்டிருக்கிறார்.