விஜய் தொலைக்காட்சியின் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தம்- எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கு போட்டார்கள்.
இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு இருந்த நிலையில் இப்போது தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
லாக் டவுன் காரணத்தால் சீரியல்கள் படப்பிடிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டது, தற்போது சில சீரியல்களின் படப்பிடிப்பு வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் இன்று முதல் சீரியல்கள் வழக்கம் போல் ஒளிபரப்பாக இருக்கிறது, அதற்கான புரொமோக்கள் தொலைக்காட்சியில் கலைகட்டி வருகிறது.
ஆனால் கொரோனா காரணமாக இரண்டு சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதால் தற்போதைக்கு அந்த சீரியல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அது வேறொந்த சீரியல்களும் இல்லை மௌன ராகம் மற்றும் வேலம்மாள் சீரியல்கள் தான். மீண்டும் எப்போது இதன் படப்பிடிப்புகள் நடக்கும் என்பது தெரியவில்லை.