சூப்பர் சிங்கர் ஐய்யனாருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... இதோ புதிய ஜோடியின் போட்டோ
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது தொடங்கப்பட்டுள்ள புதிய சீசன் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகிறது.
நிச்சயதார்த்தம்
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தங்களது பாடல் திறமையை வெளிக்காட்டி மக்களிடம் பிரபலமானவர்கள் பலர்.
அப்படி 8வது சீசனில் சமூக பிரச்சனைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு உடைய பல பாடல்களை பாடி மக்களின் கவனத்தை பெற்றவர் தான் ஐய்யனார். ராப் பாடல்கள் பாடுவதில் திறமை கொண்ட இவர் தற்போது ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளார்.
தனது நிச்சயதார்த்தம் ஆன சந்தோஷத்தை தான் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார், ஆனால் பெண் யார் என்பது சரியாக தெரியவில்லை.