விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறதா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்
சமீபகாலமாக சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சில சீரியல்கள் முடிவு வருகிறது.
அந்த வரிசையில் விஜய் டிவியின் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த 2 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருகிறதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்த சீரியலில் நிகழ்ந்து வந்த அனைத்து தடைகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் முடிவு வருமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர், நடிகைகள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த சீரியலின் முடிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.