மறைந்த ரோபோ ஷங்கர், அவரின் நினைவாக விஜய் டிவி வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ
ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமாவில் சாதித்துள்ள பிரபலங்கள் அனைவரும் எடுத்த உடனே பெரிய இடத்தை அடைவதில்லை.
அவர்களின் உயர்வுக்கு பின் எத்தனையோ வலி, வேதனை, உழைப்பு, கஷ்டம் எல்லாம் இருக்கும். அப்படி ஆரம்ப காலத்தில் இருந்தே நிறைய கஷ்டப்பட்டு இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் ரோபோ ஷங்கர்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் அதில் இருந்து உடல்நிலை சரியாகி மீண்டும் நடிக்க தொடங்கினார்.
ஆனால் சில காரணங்களால் அவர் உடல்நிலை மோசமாக சிகிச்சை பலன் இன்றி கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
வீடியோ
கடைசியாக ரோபோ ஷங்கர் விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கு இந்த மேடை தான் பெரிய வாய்ப்பாக அமைந்தது என நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
தற்போது அது இது எது நிகழ்ச்சி மேடையில் அவருக்கு ராமர், புகழ் உள்ளிட்ட கலைஞர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். விஜய் டிவி வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,