விஜய் டிவி பெயரில் இப்படி ஒரு மோசடியா? மக்களை எச்சரித்த சேனல்
விஜய் டிவி
விஜய் டிவி தமிழ்நாட்டில் நம்பர் 2 செயலக இருந்து வருகிறது. ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவியில் பாப்புலர் ஆகி அதன் பின் சினிமாவில் நுழைந்து சந்திப்பவர்கள் லிஸ்ட் மிக பெரியது. அதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தேடுபவர்கள் ஏராளம்.
மோசடி
இந்நிலையில் விஜய் டிவியல் வாய்ப்பு வாங்கி தருவதாக நடந்து வரும் மோசடி பற்றி தற்போது சேனல் தரப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
வாய்ப்பு வாங்கி தருவதாக உங்களின் போட்டோ, வீடியோக்கள் மற்றும் பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு சேனல் பொறுப்பல்ல என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அனைவரின் கவனத்திற்கு! #VijayTelevision #VijayTV pic.twitter.com/vX7fH4t7lL
— Vijay Television (@vijaytelevision) June 29, 2023
2ம் இடத்துக்கு தள்ளப்பட்ட கயல் சீரியல்.. டிஆர்பி-யில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்!