விஜய் டிவி பெயரில் மோசடி.. சேனல் வெளியிட்ட தகவல்
தற்போது தமிழ்நாட்டில் முன்னணி டிவி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அந்த சேனலில் வரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவி பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் எச்சரித்து சேனல் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
வாய்ப்புக்காக பணம்
விஜய் டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வாங்கி தருவதாக சிலர் பணம் பெற்று மோசடி செய்திருக்கின்றனர். அதற்கு நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஸ்டார் விஜய் பெயரை பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகள் மற்றும் அலையுப்புகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர். முழு அறிக்கை இதோ.


உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
