சினிமாவை விடுங்க, இதிலும் விஜய் தான் இந்திய அளவில் No.1.. முழு விவரம்
நடிகர் விஜய் தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும் போதே முழு நேர அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து புது கட்சி தொடங்கிவிட்டார். ஜனநாயகன் படத்திற்கு அவர் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிட இருக்கிறது. அதற்கான பணிகள் ஒரு பக்கம் நடக்க, விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் பலியான சம்பவம் பற்றிய விசாரணைக்கும் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டு முறை ஆஜராகி இருந்தார்.
மேலும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் தொடர்பான பிரச்சனையின் வழக்கும் தீர்ப்பு தேதி தெரிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி விஜய் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இதிலும் நம்பர் 1
இத்தனை சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் இந்திய அளவில் ஒரு விஷயத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறார். 'Most Talked about Indian Politicians' என்ற பட்டியலை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.
அந்த லிஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடியை முந்தி விஜய் தான் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறார். ஜனவரி 1 - 15ம் தேதி வரையிலான புள்ளி விவரம் இது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri