5 நாட்கள் தான் அவகாசம்.. சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்யின் தவெக கட்சி
நடிகர் விஜய்
நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு படத்திற்கு சுமார் ரூ. 200 கோடி சம்பளம் பெறும் நிலையில், திடீரென விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறி இருக்கிறார். தற்போது, அவர் நடிப்பில் கடைசியாக 'தளபதி 69' படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அவர் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு பல சவால்களுக்கு பிறகு வருகின்ற அக்டோபர் மாதம் 27- ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார்.
தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரும் அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
சிக்கலில் தவெக கட்சி
ஆனால், ஒரு சில கட்சி தலைவர்கள் தளபதியின் அரசியல் வருகையை குறித்து பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மாநில துணைத் தலைவர் சந்தீப் தற்போது, தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான விஜய்க்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறாராம்.
அதில், 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.