விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 15 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்கள் சேர்ந்தார்களா?
நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் பட தகவல்களை தாண்டி இப்போது அவரது ரசிகர்கள் கட்சி பற்றிய விவரங்களை தான் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
கடந்த மாதம் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெயர் அறிவித்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கட்சியின் உறுப்பினர்கள்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.
அதில் முதல் நபராக தனது பெயரை பதிவு செய்து வீடியோ வெளியிட்டார் விஜய். உடனே ரசிகர்கள் அனைவருமே முந்திக்கொண்டு பதிவு செய்ய செயலியே Crash ஆனது.
இந்த நிலையில் 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
