வெற்றிகரமாக 100 நாட்களை கடந்த விஜய் டிவி-யின் பிரபல சீரியல், உற்சாகமாக முக்கிய வெளியிட்ட பதிவு..!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் ராஜா ராணி 2 , இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் சமீபத்தில் 100 நாட்களை கடந்துள்ளது. இதனை ராஜா ராணி 2 சீரியல் குழுவினர் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் சித்து ரசிகர்களிடம் இருந்து வரும் வாழ்த்துகளை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் "இதுக்கு மேல ஓரு ஆர்டிஸ்ட்டுக்கு என்ன வேணும்? என் அன்பான நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் நான் நேசிக்கிறேன். என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.