விஜய்யின் வாரிசு படத்தில் இப்படியொரு ஸ்பெஷல் பாடலா?- அடுத்த ஆல்தோட்ட பூபதியா?
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் பேச்சுகள் தான் இப்போது அதிகம். வரும் பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாக இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா பாடல் என 3 வெளியாகிவிட்டது. வரும் டிசம்பர் 24ம் தேதியும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

ஸ்பெஷல் பாடல்
தற்போது என்னவென்றால் இப்படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் பாடியதாகவும் இந்த பாடல் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு இணையாக கேட்டவுடன் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆல்தோட்ட பூபதி பாடலை சங்கர் மகாதேவன் தான் பாடியிருக்கிறார்.
மாளவிகா மோகனனுக்கு ஓப்பனாக பதிலடி கொடுத்த நயன்தாரா! மறைமுக தாக்கு