விஜய்யின் 'வாரிசு' போஸ்டரும் காப்பியா? போட்டோவை எங்கிருந்து எடுத்திருக்கிறார்கள் பாருங்க
நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு இயக்குனர் வம்சி கூட்டணி சேர்ந்திருக்கும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து இருக்கிறது.
அதில் விஜய் கோட் சூட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் பாஸ் போல அமர்ந்திருக்கிறார். த பாஸ் ரிட்டர்ன்ஸ் என அதே போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் வாரிசு பட போஸ்டரில் இருக்கும் பின்னணி போட்டோவை கூகுளில் இருந்து தான் எடுத்திருக்கிறார்கள் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் பட போஸ்டர் இப்படி சர்ச்சையில் சிக்கிய நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விஜய் பட போஸ்டரும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.
Google Image ..?#VarisuFLTrolls pic.twitter.com/5GyEXnbDGP
— K O D U V A (@KoduvaV15) June 21, 2022