விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் அதிகம்- வாரிசு பட ரிலீஸ் குறித்து மாஸ் தகவல்
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி படிப்பல்லி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு வெற்றிகரமாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
தற்போது அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே மற்றும் நேற்று ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்து படத்தின் டீஸர் குறித்து அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
சூப்பர் தகவல்
இந்த நேரத்தில் தான் விஜய்யின் வாரிசு பட ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் வாரிசு திரைப்படம் USAவில் 600க்கும் அதிகமான லொகேஷன்களில் ரிலுஸ் ஆகவுள்ளது.
இது விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
