வாரிசு பட போஸ்டரில் விஜய் கையில் கட்டியிருக்கும் வாட்ச் விலை மட்டுமே இத்தனை கோடியா?
விஜய்யின் வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடிக்கும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, காரணம் விஜய்யின் கடைசி படமான பீஸ்ட் அவ்வளவாக வசூல் சாதனை செய்யவில்லை.
எனவே இப்படம் கண்டிப்பாக அவருக்கு ஹிட்டாக அமைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் படப்பிடிப்பில் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
அண்மையில் சூப்பரான பாடல் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

வாட்ச் விலை
வாரிசு படத்தின் ஒரு போஸ்டரில் விஜய் கையில் ஒரு சூப்பரான வாட்ச் உள்ளது, அந்த வாட்ச் விலை குறித்து இப்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வாட்ச் பெயர் Patek Philippe, இதன் விலை ஒரு கோடியே 25 லட்சமாம்.
இது சுவிட்சர்லாந்தின் ஆரம்பர நிறுவன வாட்ச் எனப்படுகிறது. வாட்ச் ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆனதாம், வாட்ச் உள்ளே தங்கமூலம் பூசப்பட்டதாக இருக்கிறது.