நடிகர் அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்.. போட்டோவை வெளியிட்ட பிரபலம்
நடிகர் அமிதாப் பச்சன் இந்தியா முழுவதும் பிரபலம் ஆன நடிகர். 80 வயதை தாண்டிய பிறகும் அவர் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
சுமார் 1600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்திய அளவில் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அமிதாப் பச்சன். அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடிகர்கள் தான்.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது MP ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[YQRDGE
தங்கத்தில் டாய்லெட்
அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட் வைத்து இருக்கிறார். அதன் போட்டோவை நடிகர் விஜய் வர்மா வெளியிட்டு இருக்கிறார்.
2016ல் அமிதாப் பச்சன் உடன் ஒரு படத்தில் நடித்தபோது அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது அமிதாப் வீட்டில் தங்கத்தில் டாய்லெட் இருப்பதை பார்த்து அவர் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்.
அந்த போட்டோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.
